RAILWAYS

பசுமை ரயில்வே திட்டத்தின் முக்கிய அம்சமான ஹைட்ரஜன் ரயில் சேவை.. இந்தியா பெரும் சாதனை !

By ASWATHTHAMAN N • 2026-07-20 17:19 • 7 views   Share WhatsApp Share Facebook Share X
பசுமை ரயில்வே திட்டத்தின் முக்கிய அம்சமான ஹைட்ரஜன் ரயில் சேவை.. இந்தியா பெரும் சாதனை !

இந்த ரயிலை இயக்குவது நம்ம தண்ணி H2O ஃபார்முலாதான். டீசல், தலைக்கு உச்சியில் கம்பி உரசிச் செல்லும் மின்சாரம் கிடையாது. இந்தியாவில் முதன்முதலாக ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தி சொந்தத் தயாரிப்பில் இயங்கும் ரயில். பெட்டியின் மேலே ஹைட்ரஜன் வாயு டேங்குகள் இருக்கும். அதில் ஆக்ஸிஜன் செலுத்தி மின்சாரம் உண்டாக்கி ரயிலை இயக்க வைக்கிறார்கள். புகை வெளியிடாது. நீர் துளிகள் ஆவியாக வெளியேறும்.
பசுமை ரயில்வே திட்டத்தின் முக்கிய அம்சமான ஹைட்ரஜன் ரயில் சேவை, பல ஆண்டுகளாக இறக்குமதி செய்யப்படும் டீசலை, இந்தியா சார்ந்திருப்பதை கணிசமாக குறைத்துள்ளது. ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது என்பதால், அதை பாதுகாப்பாக பயன்படுத்தி இயக்குவதற்காக பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு அனுமதியளித்துள்ளது.

ரயிலில் பிரத்யேகமாக, பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்ட பெட்டியில் அதிக அழுத்தம் கொண்ட ஹைட்ரஜன் நிரப்பப்படும். இது, காற்றுடன் வேதிவினை புரியும்போது மின்சாரம் உற்பத்தியாகி ரயில் இயங்குகிறது. டீசல் இன்ஜின்களை போல் இந்த ரயில் கார்பனையோ அல்லது கரும்புகையையோ வெளியிடுவதில்லை. மாறாக, ஹைட்ரஜன் வேதி வினையால் நீராவி மட்டுமே துணைப் பொருளாக வரும்.

இதனால், சுற்றுச்சூழலுக்கு எந்த கேடும் ஏற்படாது. இதனால், ஹைட்ரஜன் ரயில் போக்குவரத்தை ஊக்குவிக்கும் உலக நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. எனினும், ஹைட்ரஜன் ஆற்றல் ரயில்கள் உலகளவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபடி மேலே முன்னேறியுள்ளது. தற்போது உலகளவில் இயங்கும் பெரும்பாலான ஹைட்ரஜன் பயணியர் ரயில்கள், இரண்டு அல்லது மூன்று பெட்டிகளை மட்டுமே கொண்டுள்ளன.
குறுகிய துார வழித்தடங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, இந்திய ரயில்வேயின் ஹைட்ரஜன் ரயில், 2,600 பயணியர் செல்லும் வகையில் 10 பெட்டிகளை கொண்டுள்ளது. சென்னை ஐசிஎஃபில் தயாரிக்கப்பட்டது.
ஹைட்ரஜன் தீப்பிடிக்கும் அபாயம் அதிகம். இந்த அபாயத்தைத் தடுக்க பாதுகாப்பு வழிகள் டெக்னிக்களாக செய்யப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக வேறு தடங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். அதில் தமிழ்நாடு நீலகிரி மலை ரயில் பாதையும் அடக்கம்.
ரயிலின் நீல வண்ணம்? மாசு இல்லாமைக்கு நீல நிற மாசுமருவற்ற வானம் குறியீடு.

ASWATHTHAMAN N 0 followers