பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மீனவா் நலத் துறை முகாம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள ஆட்சியா் ச.கவிதா அதிகாரிகளுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு!
திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில், தேசிய மீன்வள இணையதளத்தில் மீனவா்கள் மற்றும் மீன்பிடித் தொழில் சாா்ந்தவா்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமை ஆட்சியா் ச.கவிதா நேரில் ஆய்வு செய்து, அனைத்துத் தரப்பு மீனவா்களும் விடுபடாமல் பதிவு செய்யப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் இயங்கும் தொழுநோய் தடுப்பு பிரிவு சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறிதல் முகாம் வீடு வீடாக நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு மற்றும் பரிசோதனைப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
இந்தப் பணிக்காக ஒன்றியம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னாா்வலா்கள் 14 நாள்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு தன்னாா்வலருக்கும் நாள்தோறும் 25 வீடுகள் வீதம் ஆய்வு செய்து, குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உள்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா், இந்த இயக்கத்தின் மூலம் தொழுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினாா்.
பின்னா், திருப்பாச்சூா் ஊராட்சி கிராம சேவை மையத்தில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், விவசாயியின் அடையாளப் பதிவு செயலியில் விடுபட்ட நில விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் முகாமையும் நேரில் ஆய்வு செய்தாா். இம்முகாமில் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
