லஞ்சத்தை ஒழிக்க தமிழக முதல்வர் விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
லஞ்சத்தை ஒழிக்க தமிழக முதல்வர் விஜய் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள். கேட்டால் இது எங்கள் விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள் என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் ஆப் எண் : 94981 80936
போன் எண்கள் : 044-2232 1090 / 2232 1085 044-2231 0989 / 2234 2142
இ-மெயில் முகவரி: dvac@nic.in
அலுவலக முகவரி: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம், எண் 293. எம்.கே.என்.தெரு. ஆலந்துார், சென்னை-600 016.
லஞ்ச ஊழலுக்கு எதிரான போரில் இணையுங்கள் வாசகர்களே! இந்த விளம்பரத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் பார்வையில் படும் இடத்தில் ஒட்டுங்கள்!
இதனை தொடருந்து சென்னை மாநகராட்சியில் தீவிர ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறை சோதனைகளைத் தொடர்ந்து, முறைகேடுகளில் ஈடுபட்ட 6 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 4 மூத்த அதிகாரிகள் உட்பட மொத்தம் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகளும், நான்கு பேர் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்படவுள்ளன. டெண்டர் முறைகேடு, நிதி முறைகேடு மற்றும் லஞ்ச புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதை நான் உறுதி செய்வேன். ஊழல் விவகாரத்தில் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார், என்றார்.