மின்வாரிய அதிகாரியின் புது நம்பர் இதுதான்! காஞ்சிபுரம் மக்களுக்கான அறிவிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மின் வாரிய அலுவலர்களின் பயன்பாட்டில் இருந்த மொபைல் போன் எண்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகத் தமிழ்நாடு மின் வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மின் பகிர்மான கோட்டங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
பொதுமக்களின் வசதிக்காகவும், மின் தொடர்பான புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து தீர்வு காணவும் உயர் அதிகாரிகள் முதல் உதவிப் பொறியாளர்கள் வரை பல்வேறு நிலை அலுவலர்களுக்குச் சிறப்பு சி.யு.ஜி. குழு மொபைல் எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர்களின் புதிய எண்கள்
புதிதாக மாற்றப்பட்ட எண்களின்படி, காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளருக்கு 92800 72700 என்ற எண்ணும், பொது செயற்பொறியாளருக்கு 92800 72701 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கணக்கு மற்றும் நிதி கட்டுப்பாட்டு அலுவலருக்கு 92800 72702 என்ற எண்ணும், மீட்டர் செயற்பொறியாளருக்கு 92800 72624 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உதவிச் செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்களுக்கும் புதிய எண்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி, வாலாஜாபாத் உதவி செயற்பொறியாளருக்கு 92800 72671, திருமுக்கூடலுக்கு 92800 72651, உத்திரமேரூர் ஊரக உதவி பொறியாளருக்கு 92800 72653, மானாம்பதி பகுதிக்கு 92800 72657, இளையனார்வேலூருக்கு 92800 72664, பாப்பான்சத்திரத்திற்கு 92800 72682 மற்றும் பண்ருட்டி உதவி பொறியாளருக்கு 92800 72683 ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மின் தடை மையங்கள் மற்றும் வாட்ஸ்அப் உதவி எண்கள்
மின்சாரத் தடை மற்றும் அவசரக் தேவைகளுக்காகச் செயல்படும் மின் தடை மையங்களின் தொலைபேசி எண்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மின் தடை மையம் 1-க்கு 92800 72646, மின் தடை மையம் 2-க்கு 92800 72647, மின் தடை மையம் 3-க்கு 92800 72648 மற்றும் மின் தடை மையம் 4-க்கு 92800 72649 ஆகிய தொடர் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, பொதுமக்கள் எளிதாகப் புகார்களை அனுப்பும் வகையில் காஞ்சிபுரம் மின் தடை மைய வாட்ஸ்அப் எண்ணாக 92800 72650 என்ற புதிய எண் வழங்கப்பட்டுள்ளது.
முன்பு பயன்பாட்டில் இருந்த பழைய எண்களுக்குப் பதிலாக, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மொபைல் போன் எண்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்திச் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.