CULTURE

அம்மிக்கல்லும்... நோய் இல்லாத வாழ்க்கையும்!

By ASWATHTHAMAN N • 2026-07-25 13:24 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
அம்மிக்கல்லும்... நோய் இல்லாத வாழ்க்கையும்!

அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். இது தொல்பழங்காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கற்கருவி ஆகும். அம்மியும் குழவியும் பயன்படப் பயன்பட மழுமழுப்பாகிவிடும், இதனால், பொருட்கள் சரியாக அரைபடாது. எனவே, கல்தச்சர் ஒருவரைக் கொண்டு, உளியால் பொள்ளி நுண்ணிய சிறு சிறு குழிகள் ஆக்குவர் (பொள்ளுதல் = குழி இடுதல்). இதற்கு அம்மி பொளிதல் என்று பெயர். அம்மியையும் குழவியையும் இவ்வாறு பொளிதலால் உராய்வு நன்றாக ஏற்பட்டு, பொருட்கள் நன்றாக அரைபடும். தமிழகத்தில், குறிப்பாக இது சிற்றூர்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சமையலுக்குத் தேவையான மஞ்சள், சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைப்பதற்கு உதவுகிறது.
சின்ன வயசுல பாட்டி அம்மிக்கல்ல சட்னியோ, அரவமோ அரைக்கும் போது பக்கத்துல உட்கார்ந்து வேடிக்கை பார்த்த ஞாபகம் இருக்கா?
அந்தக் காரசாரமான துவையல் வாசனை வீடு முழுக்க தூக்கும்! கடைசியில அம்மிக்கல்ல வழச்சு வழிச்சு வழிச்சு தர்ற அந்த "அம்மித் துவையல் உருண்டை" ஒன்னு போதும்... சோறு பஞ்சா பறக்கும்!
அன்னைய வாழ்க்கையும்... இன்றைய வாழ்க்கையும்:
அன்றைய உடற்பயிற்சி: தனியா ஜிம்முக்கு போகத் தேவையில்லை. தினமும் காலையில அம்மிக்கல், ஆட்டுக்கல் ஆட்டுறதே கைக்கும் இடுப்புக்கும் செம எக்சர்சைஸ்!
நோய் இல்லா வாழ்வு: அன்னைக்கு NO SUGAR, NO PRESSURE! உடம்பு உழைச்சது, மனசு ஆரோக்கியமா இருந்துச்சு.
சுவையின் ரகசியம்: மின்சார மிக்ஸியில சூடாகி அரைக்கிறதை விட, அம்மிக்கல்ல நசுங்கி அரைபடுற மசாலாவோட ருசியே தனி!
இன்னைக்கு ஸ்விட்ச் போட்டா 2 விநாடியில அரைச்சு முடிச்சிடுறோம்... ஆனா கூடவே வாக்கிங் போக மாத்திரை, சுகர் செக் பண்ண மெஷின்னு வாழ்க்கை மாறிடுச்சு!
தொழில்நுட்பம் வளர்ந்தது சந்தோஷம் தான், ஆனா நம்ம பாரம்பரிய உடலுழைப்பும், இயற்கை உணவும் தந்த ஆரோக்கியத்தை நம்ம இழந்துட்டோமோன்னு தோணுது!

ASWATHTHAMAN N 0 followers