SCHOOL SYSTEM

சத்துணவு பணியாளர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமையில் 10 ஆண்டுகளாக தவிக்கும் ஊழியர்கள...

By ASWATHTHAMAN N • 2026-08-05 04:24 • 2 views   Share WhatsApp Share Facebook Share X
சத்துணவு பணியாளர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமையில் 10 ஆண்டுகளாக தவிக்கும் ஊழியர்கள...

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குச் சத்தான மதிய உணவு வழங்குவது சத்தான உணவு திட்டம் | சமூக நலத்துறை, தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் எனப் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,839 சத்துணவு பணியாளர்களில் 1,055 பேரின் பணியிடம் காலியாக உள்ளதால், மதிய உணவு சமைத்து பல பள்ளிகளுக்கு விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தவிர, போதிய பணியாளர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமையில் 10 ஆண்டுகளாக தவிக்கும் ஊழியர்கள், காலியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் பள்ளிகள் உள்ளன. இதில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ ---- மாணவியருக்கு, மதிய நேர உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவால், 1 லட்சத்து 7,886 பேர் பயனடைகின்றனர்.
இப்பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு சமையல் செய்வதற்காக, மாவட்டத்தில் 945 மையங்கள் உள்ளன. இங்கு சமைக்கப்படும் உணவுகள், பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதற்காக, ஒவ்வொரு மையத்திலும் மூன்று படிநிலைகளில் ஊழியர்கள் இருக்க வேண்டும். ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருக்க, அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த மையத்திலும் அப்படியான நிலை இல்லை. தவிர, ஊழியர்கள் பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் 10 ஆண்டுகளாக ஏராளமான காலி இடங்கள் உருவாகி உள்ளன.
மாவட்ட அளவில் சத்துணவு 430 அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல மையங்களில் ஒரு சமையலர் மட்டுமே, அதிகாரப்பூர்வ ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரே சமையல் செய்ய வேண்டும். அதை மற்றொரு பள்ளிக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.


தவிர, ஒரு அமைப்பாளர் ஐந்து மையங்களை கவனித்து வருவதால், கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் மாணவர் வருகை பதிவை பொறுத்தே செலவினம், உணவு பொருட்களின் அளவு இருக்கும். இதற்கான கணக்குகளை பராமரிப்பது சத்துணவு அமைப்பாளரின் முக்கிய பணி.

ஒரு அமைப்பாளரே பல மையங்களுக்கு செல்வதால், போக்குவரத்து செலவு மற்றும் அலைச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதேபோல் மாவட்டம் முழுதும் 947 சத்துணவு கூடங்களில் 780 பேர் பணிபுரிந்து வருகின்றனர். 167 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், 458 சமையல் உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

கூடுதல் பணிச்சுமையில் தவிக்கும் ஊழியர்கள், காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சத்துணவு அமைப்பாளர்கள் கூறியதாவது:

ஒரு பள்ளியில் சமைக்கப்படும் உணவுகள், மற்ற பள்ளிகளுக்கு எடுத்து செல்ல வாகன வசதி இல்லை. தலையில் சுமந்து செல்லும் நிலையே உள்ளது. இதனால், அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. இதற்கு மாற்றுவழி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாவட்டம் முழுதும் காலியாக உள்ள சத்துணவு பணியாளர்கள் குறித்த விபரங்களை, அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளோம். கடந்த மாதம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திலும், இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ASWATHTHAMAN N 0 followers