செங்கல்பட்டு அருகே தேனூர் கிராமத்தில் ஏரி நிலத்தில் தனியார் தரப்பு சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு மக்கள் திரண்டு எதிர்ப்பு!!
செங்கல்பட்டு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய மாவட்டம்[ மற்றும் நகரம் ஆகும். இது சென்னைக்கு அருகில் அமைந்துள்ளது. இது கல்வி, மருத்துவம் மற்றும் தொழில்துறைக்கு பெயர் பெற்றது.
செங்கல்பட்டு அருகே உள்ள தேனூர் கிராமத்தில் ஏரிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஒருவர் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்ரவாக்கம் ஊராட்சி தேனூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது.
இந்த ஏரி தண்ணீரை நம்பி அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில், சென்னையை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவருக்கு இந்த பகுதியில் ஒரு ஏக்கர் காலிமனை உள்ளது. தனது நிலத்துக்கு பாதுகாப்பு கருதி ஏரிக்கு சொந்தமான நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், நீர்நிலைக்குழு தலைவர் குட்டி மற்றும் ஊர்பொதுமக்கள் திரண்டுவந்து தடுப்புச்சுவர் அமைத்துவரும் வெங்கட்ராமனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘’இந்த ஏரியில் ஏற்கனவே மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்து செல்வதால் விவசாயம் செய்யமுடியாமலும் நீராதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடுப்புச்சுவர் அமைத்தால் மேலும் விவசாயம் பாதிக்கப்படும்’ என்று தெரிவித்தனர். இதுகுறித்து வெங்கட்ராமன் கூறுகையில், இது எனது இடம். என்னுடைய இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கிறேன்’ என்றார். இதன்காரணமாக அவருக்கும் ஊர் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் ‘சர்வேயரை வைத்து ஏரி முழுவதையும் அளந்து ஏரிக்கு சொந்தமானதா அல்லது வெங்கட்ராமனுக்கு சொந்தமானதா என்று தெரியும் வரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர். இதனிடையே, இந்த ஏரியை தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்’’ என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.