PUBLIC AWARENESS

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் eKYC சிறப்பு முகாம்:

By ASWATHTHAMAN N • 2026-08-26 12:13 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் eKYC சிறப்பு முகாம்:

தமிழகத்தில் மொத்தம் 35,039 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் (முழுநேர கடைகள் 24,684 மற்றும் பகுதி நேர கடைகள் 10,355) செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் கீழ், முன்னுரிமை (PHH) மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) ஆகிய குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்துப் பயனாளிகளின் ஆதார் எண்களையும், அவர்களின் கைரேகை (Biometric) அடிப்படையில் 100% துல்லியமாகச் சரிபார்ப்பதே (eKYC) இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு முகாம் விவரங்கள்

நாள்: 29.08.2026 (சனிக்கிழமை)

நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இடம்: தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்)

தற்போதைய நிலவரம்

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி இப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, கடந்த அக்டோபர் 2023 முதல் ரேஷன் கடைகளில் இந்த விரல் ரேகை சரிபார்ப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% பயனாளிகளுக்கு eKYC பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள பணிகளை 100% முழுமையாக நிறைவு செய்யும் நோக்கில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ரேஷன் கடைகள் மூலம் தங்களது கைரேகையைப் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், வரும் ஆகஸ்ட் 29 அன்று தத்தமது பகுதி நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமினைப் பயன்படுத்தி, தங்களது eKYC பதிவினைத் தவறாமல் புதுப்பித்துக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

குடும்ப அட்டைகளில் உள்ள குளறுபடிகள், போலிப் பெயர்கள் மற்றும் தகுதியற்ற பயனாளர்களை நீக்கி, தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த eKYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் பெயர்கள் அல்லது இடமாற்றம் காரணமாகப் புழக்கத்தில் இல்லாத பெயர்களைக் கண்டறிந்து, ரேஷன் விநியோக முறையை (PDS) மிகவும் வெளிப்படையானதாக மாற்ற மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.

ASWATHTHAMAN N 0 followers