RAILWAYS

பல்வகை சரக்கு முனைய பூங்கா திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு தனி ரயில் பாதை அமைக்கும் பணி, நடைபெறுகிறது...

By ASWATHTHAMAN N • 2026-07-30 04:30 • 3 views   Share WhatsApp Share Facebook Share X
பல்வகை சரக்கு முனைய பூங்கா திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு  தனி ரயில் பாதை அமைக்கும் பணி,  நடைபெறுகிறது...

மப்பேடு பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்காவில் இருந்து கடம்பத்தூர் வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணி

சரக்கு ரயில் என்பது பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பதிலாக, சரக்குகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் ஒரு ரயில் வண்டியாகும். சரக்கு ரயில்களில் உந்துவிசையை வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட என்ஜின்களும், சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரயில் பெட்டிகளும் (வேகன்கள்) இடம்பெறும். பல்வேறு வகையான சரக்குகள் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டாலும், குறைந்த உராய்வு காரணமாக மொத்த மற்றும் கனமான சரக்குகளை நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்வதற்கு சரக்கு ரயில்கள் மிகவும் ஏற்றதாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் சரக்குகளை விரைவாக ஏற்றுமதி செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்காவில் இருந்து கடம்பத்தூர் ரயில் நிலையம் வரை தனி ரயில் பாதை அமைக்கும் பணி ரூ.216 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள் சரக்கு ரயில்கள் மூலம் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சரக்குகளை விரைவாக கையாளும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் ரூ.1,423 கோடி செலவில் 182 ஏக்கர் பரப்பளவில் பல்வகை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

மப்பேடு சரக்கு போக்குவரத்து பூங்காவில் இருந்து கடம்பத்தூர் வரை சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் தற்போது தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சரக்கு போக்குவரத்து பூங்காவில் சேமிப்பு கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் மற்றும் நவீன சரக்கு கையாளும் இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளன. மப்பேடு - கடம்பத்தூர் இடையே 12 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் புதிய ரயில் பாதை, தொழில் நிறுவனங்களின் சரக்கு போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ASWATHTHAMAN N 0 followers