மகளிர் இலவச பயண விவரம் தெரிந்து கொண்டு மகளிர் பேருந்துகளில் ஏறவும்!
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம் 'வெற்றிப் பயணம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 2, 2026 முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது
அரசு புறநகர் பேருந்துகளில் மகளிர்க்கு இலவசம் என்றாலும், அது ஒரு பணிமனையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவுவரை உள்ள ஊருக்கு இயக்கப்படுகிற பேருந்துகளில் மட்டுமே.
உதாரணத்திற்கு கள்ளக்குறிச்சியில் இருந்து கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் ஒரு பேருந்தின் பயண தூரம் 210 கிலோமீட்டர்.
இந்தப் பேருந்தில் இலவசமாக பயணிக்க முடியாது.
அதே கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.
கள்ளக்குறிச்சியில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளில் எந்த ஊருக்கும் இலவசமாக பயணிக்கலாம்
இதே கள்ளக்குறிச்சி- கிளாம்பாக்கம் பேருந்து, 210+210 என்று 420 கிலோமீட்டர் ட்ரிப் முடிந்ததும், ஒரு நாள் மொத்த கிலோ மீட்டர் இலக்கை முடிக்க (410+152) அதே பேருந்தை விழுப்புரம் வரை கட் ஷாட்க்காக ஓட்டுவார்கள்.
கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் வரை (76Km) தான் இயக்கப்படுகிறது என்றாலும், இந்தப் பேருந்திலும் இலவசம் கிடையாது.
420 கிலோமீட்டர் வரை பெண்களுக்கு டிக்கெட் கொடுத்து இயக்கப்பட்ட ஒரு பேருந்தில் கடைசி ட்ரிப் மட்டும் இலவசம் கொடுப்பது நடைமுறை மற்றும் டெக்னிக்கல் ரீதியாக சிக்கல் என்கின்றனர்.
இன்னொரு உதாரணம், வேலூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் வரை (ரூட் நெம்பர் 155) செல்லும் (125 km) பேருந்தில், 70 கிலோ மீட்டரில் உள்ள காஞ்சிபுரத்திற்கு பயணிக்க முடியாது.
ஆனால் வேலூரில் இருந்து காஞ்சிபுரம்வரை இயக்கப்படும் (No 156) பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மற்றொரு பேருந்தில் இலவசமாக செல்லலாம்.
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் பேருந்தில் தஞ்சாவூருக்கு செல்லலாம். ஆனால் திருச்சி டு கும்பகோணம் பேருந்தில் தஞ்சைக்கு இலவசமாக போக முடியாது.
எனவே புறநகர் பேருந்துகளில் எது, எந்தெந்த வண்டிகளில் கட்டணமில்லாத பயணம் என்பதை பெண்கள் முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கும் இருக்கிறது.
எந்த திட்டம் என்றாலும் மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள புரிந்து கொஞ்ச காலம் தேவைப்படும்.