TRANSPORT AND INFRASTRUCTURE

சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் முதல்வர் விஜய் அறிவிப்பு!

By ASWATHTHAMAN N • 2026-08-25 05:17 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
சாதாரண பேருந்துகள் மட்டுமல்லாமல் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ் மற்றும் டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னை: அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், அக்டோபர் 2-ஆம் தேதி முதல் டீலக்ஸ் மற்றும் எல்.எஸ்.எஸ். உள்ளிட்ட கூடுதல் பேருந்து வகைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் டீலக்ஸ் பேருந்துகள் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட பேருந்து வகைகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான இந்த பயண வசதிக்கு வருமான உச்சவரம்போ அல்லது பயணங்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடோ இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களுக்கு அனைத்து நகர பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை செயல்படுத்துவதாக தெரிவித்திருந்தது. தற்போது அந்த வாக்குறுதி எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் “மகளிர் வெற்றிப் பயணம்” என்ற பெயரில் அக்டோபர் 2 முதல் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பேருந்து சேவைகளிலும் கட்டணமில்லா பயண வசதி விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 முதல் இந்த விரிவாக்கத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.6,000 கோடி செலவினம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருநங்கைகளும் இந்த கட்டணமில்லா பயண வசதியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறிப்பிட்ட வகை பேருந்துகளில் வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி, தற்போது மேலும் சில பேருந்து வகைகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்கள், புறநகர் (Mofussil) பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ASWATHTHAMAN N 0 followers