சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என பெயர் சூட்ட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்திய ராணுவத்தின் தென்னிந்திய பகுதிகளுக்கான தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வி. ஶ்ரீஹரி, இந்த கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்தார். இதனை பரிசீலித்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு தமிழில் “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என்றும், ஆங்கிலத்தில் “MAJOR MUKUND VARADARAJAN SALAI” என்றும் பெயர் சூட்ட அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அவரது குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.