எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
ராஜினாமா கடிதங்களை வழங்கிய கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து கட்சியில் சேர்ந்தனர் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும் த.வெ.க.வில் இணைந்தனர்.
அதிமுகவில் உட்கட்சி குழப்பம் வெடிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி-சிவி சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தனர். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இபிஎஸ் தரப்பு சபாநாயகரை அனுகியுள்ளனர். புதிய அரசின் அமைச்சரவை அமைந்துள்ள சூழலில் அதிமுகவில் நிலவிய இந்த உட்கட்சி குழப்பத்தில் திடீர் மாறுதல்கள் இன்று ஏற்பட்டுள்ளன.
அதிமுகவிற்கு, அடுத்தடுத்து விழும் அடிகள் அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளன.
எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தங்களின் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தவெகவில் இணைகிறார்கள். இதன் பின்னணியில் கே.ஏ.செங்கோட்டையன் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் பதவி விலகல் கடிதம் வழங்கினர் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 3 பேரும் த.வெ.க.வில் இணைந்தனர் ராஜினாமா கடிதங்களை வழங்கிய கையோடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து கட்சியில் சேர்ந்தனர் வேலுமணி தரப்பிற்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா மொத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 44ஆக குறைந்தது