LATEST NEWS

ஐதராபாத் மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை பொறியாளர் ஊழல்

By MUTHURAMAN SUBRAMANIAN • 2026-07-15 10:50 • 5 views   Share WhatsApp Share Facebook Share X
ஐதராபாத் மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் தலைமை பொறியாளர் ஊழல்

₹100 கோடி சொத்து குவிப்பு வழக்கு: ஐதராபாத் மெட்ரோ தலைமைப் பொறியாளர் கைது

ஊழலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, வருமானத்திற்கு அதிகமாக பெருமளவில் சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் கீழ், ஐதராபாத் மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் (HMDA) தலைமைப் பொறியாளர் ரவீந்தரை தெலுங்கானா மாநில லஞ்ச ஒழிப்புத் துறை (ACB) அதிரடியாகக் கைது செய்துள்ளது.

கிடைக்கப்பெற்ற நம்பகமான ரகசியத் தகவலின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான இடங்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள் என பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் தீவிர சோதனை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் ஆவண மதிப்பு ₹9.24 கோடியாக இருந்தாலும், அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ₹100 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

அவர் குவித்துள்ள சொத்துக்களில் பிளாட்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலங்கள், ஒரு வணிக வளாகம் மற்றும் ஒரு ஆடம்பர வில்லா ஆகியவை அடங்கும். மேலும், ₹4 லட்ச ரூபாய் ரொக்கம், ₹40 லட்ச ரூபாய் வங்கி வைப்புத்தொகை, 1.40 கிலோ தங்கம், 12 கிலோ வெள்ளி மற்றும் ₹1 கோடி மதிப்பிலான 3 சொகுசு கார்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வேறு எங்கும் சொத்து சேர்த்து வைத்துள்ளாரா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரவீந்தர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முழுமையாக தண்டிக்கப்படுவார்கள், மேலும் இது போன்று நடவடிக்கைகள் தொடரும் என்று அதிகாரிகள் கூறினார்.

MUTHURAMAN SUBRAMANIAN 0 followers