May 13, 2026

e-Courts மொபைல் செயலி அப்டேட் குறித்து பயனர்களுக்கு அறிவிப்பு

e-Courts செயலியை பயன்படுத்தும் வழக்கறிஞர்கள், வழக்குதாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு:

இந்திய உச்சநீதிமன்றத்தின் e-Committee வெளியிட்டுள்ள தகவலின்படி, Android பயனர்களுக்கான e-Courts Services Mobile App Version 4.0, 13.05.2026 முதல் அமலுக்கு வர உள்ளது.

இதையடுத்து, தற்போது e-Courts செயலியை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது செயலியில் சேமிக்கப்பட்டுள்ள வழக்கு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க Data Backup செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Backup செய்வது எப்படி?

  1. மொபைலில் உள்ள e-Courts Services App-ஐ திறக்கவும்.
  2. Menu / Profile பகுதிக்கு செல்லவும்.
  3. “Export” என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  4. My Cases / Saved Cases விவரங்களை Backup செய்யவும்.
  5. Backup செய்யப்பட்ட கோப்புகளை மொபைல், Email அல்லது Cloud சேமிப்பகத்தில் பாதுகாக்கவும்.

முக்கிய தேதி

12.05.2026க்குள் Backup செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய Version 4.0-ல் கிடைக்கும் வசதிகள்

  • Court Order PDF-ஐ நேரடியாக பார்வையிடும் வசதி
  • பழைய மற்றும் புதிய Case Number Tracking
  • Quick Links வசதி
  • Bhuvan Map Integration
  • மேம்பட்ட செயல்திறன்

e-Courts செயலியை பயன்படுத்தும் அனைவரும் தங்களது வழக்கு விவரங்களை பாதுகாக்க தேவையான Backup நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Written by

SURESH KUMAR V

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION