LATEST NEWS

615 தொல்பொருட்கள் மற்றும் சிலைகள் மத்திய அரசால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

By MUTHURAMAN SUBRAMANIAN • 2026-07-22 07:31 • 6 views   Share WhatsApp Share Facebook Share X
615 தொல்பொருட்கள் மற்றும் சிலைகள் மத்திய அரசால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 615 தொல்பொருட்கள் மற்றும் சிலைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021 முதல் 2026 ஜூன் 30 வரை) மத்திய அரசால் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்

இந்நிலையில், மத்திய அரசு, ராஜதந்திர நடவடிக்கையாக, தமிழகத்தை சேர்ந்த, சோழர் கால வெண்கலம் மற்றும் கல் சிலைகள், பழமையான நினைவுச் சின்னங்கள் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டவற்றை மீட்டு வருகிறது.

நாடுகள்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து இந்தத் தொல்பொருட்கள் தாயகம் கொண்டுவரப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் பங்கு: கடந்த 30 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கடத்தப்பட்ட கலைப்பொருட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவைதான் மிக அதிகம். இதில் சோழர் காலத்து வெண்கல மற்றும் கல் சிலைகள், பழமையான நினைவுச் சின்னங்கள் பல ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டுள்ளன.முக்கிய மீட்புகள்: தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயிலில் இருந்து திருடப்பட்ட விஷ்ணு சிலை, கர்நாடகாவின் மண்டியாவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் இருந்து திருடப்பட்ட விநாயகர் சிலை ஆகியவை இதில் அடங்கும்.பாதுகாப்பு நடவடிக்கைகள்: இதுபோன்ற கடத்தல்களைத் தடுக்க தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) மற்றும் தனியார் பாதுகாப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்

MUTHURAMAN SUBRAMANIAN 0 followers